32 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வரத்தடை

0 1618

துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் மற்றும் ஏனைய பயணிகள் இந்தியாவுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய விமானத்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 32 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடையில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக உறுப்பு நாடுகளான லிச்சென்ஸ்டீன், ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு வரும் சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளுக்கும் 14 நாள் தனிமைப்படுத்தலை அரசாங்கம் ஏற்கனவே கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments