குஜராத் சட்டப்பேரவையில் இருந்து 4 காங். எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

0 959

குஜராத்தில் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து கட்சி மேலிடம் அறிவித்துள்ளது

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் நேற்று முன்தினம் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். வரும் 26-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர்கள் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாவும், அவர்களின் பெயர்களை பின்னர் வெளியிடுவதாகவும் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியிருந்தார்.

இந்நிலையில் 5 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப் பேரவையில் பாஜகவுக்கு103 எம்எல்ஏக்கள் இருப்பதால் 2 மாநிலங்களவை இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடியும். 3 வது இடத்தை ஜெயிக்க எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு https://www.polimernews.com/

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments