தவளை தன் வாயால் கெடும் - பழமொழியை உண்மையாக்கிய இளைஞன்

0 72324

தேனி மாவட்டம் போடியில் தன்னோடு தவறான தொடர்பில் இருந்த இளைஞன், அதனை மற்ற நபர்களிடம் பெருமையாக பேசி வந்ததால் ஆத்திரமடைந்த பெண், அவனை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். 

போடிநாயக்கன்பாளையம் நந்தவனத் தெருவைச் சேர்ந்த வளர்மதி என்ற அந்தப் பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால் கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

வளர்மதிக்குச் சொந்தமாக கேரள மாநிலம் இடுக்கியில் ஒன்றரை ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ளது. ஏலத்தோட்டத்துக்கு அவ்வப்போது சென்று வந்த வளர்மதிக்கு, அங்கு ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ராஜா என்ற இளைஞனோடு நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

யாருக்கும் தெரியாத ரகசியமாக இவர்களது வாழ்க்கை சென்று வந்த நிலையில், முதலாளியுடனான தனது நெருக்கத்தை ஏலத்தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் பெருமையாக பேசி வந்துள்ளான் ராஜா. இதனையறிந்த வளர்மதி அவனை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல், தனது பெருமை பேச்சை அவன் தொடர்ந்து வந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் வளர்மதி.

இதனைத் தொடர்ந்து வளர்மதியை செல்போனில் அழைத்து மிரட்டுவதும் ஆபாசமாகப் பேசுவதுமாக இருந்துள்ளான் ராஜா. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வளர்மதி, அவனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் அவன் போன் செய்தபோது, அன்பொழுக பேசி வீட்டுக்கு வா என்று அழைத்திருக்கிறார். இத்தனை நாள் சுடு நீராக கொதித்த வளர்மதி திடீரென அன்பாகப் பேசியதால் சந்தேகம் கொண்ட ராஜா, உஷாராக கத்தியோடு அவரது வீட்டுக்குச் சென்றுள்ளான். ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த வளர்மதி, வீட்டுக் கதவை அவன் திறக்கும்போதே முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி நிலை குலையச் செய்து அரிவாளால் முகம், கை, கால், வயிறு, கழுத்து என கண்மூடித்தனமாக வெட்டி வெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி வந்த போலீசார், ராஜாவை அரைகுறை உயிருடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவன் உயிரிழந்திருக்கிறான். இதனையடுத்து வளர்மதியை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments