மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமனம்

0 2723

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பதவி வகித்த அவர் கடந்த நவம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இந்நிலையில், அவரை மாநிலங்களவைக்கு நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், 12 பேரை குடியரசுத் தலைவர் எம்.பி.க்களாக நியமிக்க முடியும். கலை, இலக்கியம், பத்திரிகை, அறிவியல், விளையாட்டு, பொருளாதாரம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர் இதில் இடம்பெறுவார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒருவர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments