காதலியை கொன்று காரின் முன் இருக்கையில் வைத்து நகரை வலம் வந்த இளைஞன்

0 4743

துபாயில் இந்திய இளைஞன் ஒருவன், கழுத்தறுத்து கொன்ற காதலியின் உடலை காரின் முன் இருக்கையில் அமர வைத்து 45 நிமிடம் நகரை வலம் வந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

5 வருடமாக காதலித்து வந்த இந்திய பெண்ணுடன், மால் ஒன்றின் வெளியே காருக்குள் இளைஞன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகராறு முற்றியதில் காதலியை கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் சடலத்தை காரின் முன்சீட்டில் உயிரோடு இருப்பது போல செட்டப் செய்து துபாய் நகரை சுற்றி வந்த இளைஞன், ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு பொறுமையாக தங்களிடம் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததால் காதலியை கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய இளைஞன், துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments