முந்தைய காங்கிரஸ் அரசு வழங்கிய கோடிக்கணக்கான வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க திட்டம்
முந்தைய காங்கிரஸ் அரசு வழங்கிய கோடிக்கணக்கான வாராக்கடன்களை திரும்ப வசூலிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பெருமளவில் வங்கிகடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரின் பெயரை மத்திய அரசு வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், இது பற்றி விவரம் இணையத்தில் உள்ளதாக பதிலளித்தார். காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அளித்த கடன்கள் வாராக்கடன்களாக மாறியுள்ளதாக அவர் கூறினார். இதனால் திருப்தி அடையாத ராகுல் காந்தி துணைக் கேள்வி எழுப்ப முனைந்தார்.
ஆனால் அதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
Comments