கொரோனாவால் முடங்கிய உலக நாடுகள்..! வருந்தும் ரோஹித் சர்மா
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவால் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 5,500 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா தாக்கம் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பித்து போயுள்ளதை பார்த்து மிகவும் வருத்தமாக உள்ளதாக கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.
கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துள்ளனர். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கோவிட் -19 தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய செய்தி ஒன்றை வீடியோவாக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், தொற்றுநோய் காரணமாக கடந்த சில வாரங்கள் நம் அனைவருக்கும் கடினமான காலங்களாக உள்ளது. உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதை பார்த்தால் வருத்தமாக உள்ளது.
நாம் அனைவரும் ஒன்றிணைவதே உலகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரே வழி என குறிப்பிட்டுள்ளார் ரோஹித். கொஞ்சம் புத்திசாலியாக இருப்பதன் மூலம் நாம் இதை செய்யலாம். நமக்கோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ ஏதேனும் அறிகுறி தெரிந்தால் உடனே உங்கள் அருகிலுள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏனென்றால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம், நாங்கள் மால்களுக்குச் செல்ல விரும்புகிறோம், நாங்கள் அனைவரும் திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறோம், என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸுடன் நேர்மறை சோதனை செய்தவர்களை கவனித்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கையையும் ஆபத்தில் ஆழ்த்தி கொண்டு பணிபுரியும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகள் என்றும் கூறியுள்ளார்.
Comments