Yes Bank சேவைகள் மீண்டும் மார்ச் 18ல் தொடக்கம்
தடை செய்யப்பட்ட யெஸ் வங்கி சேவைகள் அனைத்தும் வரும் மார்ச் 18ம் தேதியுடன் தொடங்கவுள்ளது.
லட்சக்கணக்கான யெஸ் வங்கி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள யெஸ் வங்கியின் தடைகள் அனைத்தும் மார்ச் 18 அன்று மாலை 6 மணி முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் யெஸ் வங்கி தனது வங்கி சேவைகளை முழுமையாக பெற வங்கியின் 1132 கிளைகளில் எதேனும் ஒரு கிளையை தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளது.
அனைத்து யெஸ் வங்கி கிளைகளும், டிஜிட்டல் சேவைகளும் புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்குவதாக, யெஸ் வங்கியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள மாதம் 50000 வங்கி கணக்கில் பணம் எடுக்கும் முறை, புதுப்பிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்ட 3 வேலை நாள் முதல் நடைமுறையில் இருக்காது என மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. இதற்கிடையில், எஸ்.பி.ஐ தலைமையிலான கூட்டமைப்பிற்கு ரூ .10,000 கோடி பங்குகளை வழங்குவதன் மூலம் யெஸ் வங்கியின் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் ஐ.டி.எஃப்.சி வங்கி, பந்தன் வங்கி, பெடரல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி வங்கிகள் முதலீடு செய்துள்ளன.
Comments