கொரானா எதிரொலி - SBI Card பங்கு விலை வீழ்ச்சி
கொரானா வைரஸ் எதிரொலியால் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தையில் பெரிய எதிர்பார்ப்புடன் பட்டியலிடப்பட்ட எஸ்.பி.ஐ. கார்டு பங்கும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது எஸ்.பி.ஐ.கார்டு பங்கு, விற்பனை விலையாக நிச்சயிக்கப்பட்ட 755 ரூபாயில் இருந்து 12 புள்ளி 4 சதவிகித சரிவை சந்தித்து 661 ரூபாயாக குறைந்தது. கடந்த 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை எஸ்.பி.ஐ. கார்டு பங்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.
13 புள்ளி பூஜ்யம் 5 கோடி பங்குகளை வெளியிட்டு சுமார் 500 கோடி திரட்டுவதற்கான புதிய முயற்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டது. பங்கு வர்த்தக நிறுவனங்களால் 30 முதல் 35 சதவிகித வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்ட எஸ்.பி.ஐ.கார்டு பங்குகளும் வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments