கொரானா தடுப்பு நடவடிக்கை - மூடப்படும் வணிக வளாகங்கள்
தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான கோவையில் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
நோய் பரவலை தடுக்கும்பொருட்டு மாநில எல்லையோரங்களில் உள்ள 16 மாவட்ட வட்டங்களில் உள்ள வணிகவளாகங்கள், திரையரங்குகளை மூட தமிழக முதலமைச்சர் எடப்பாடி நேற்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கோவையில் உள்ள பன் மால், புரூக் பீல்ட்ஸ், ப்ரோசோன் மால் ஆகியவை மூடப்பட்டன. அதே சமயம் கோவை மாநகரில் வழக்கம் போல் திரையரங்குகள் செயல்பட்டன.
ஆனால் 20 சதவீதத்துக்கும் குறைவான பார்வையாளர்களே வந்ததால் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் திரையரங்குகளும் வெறிசோடின.
Comments