கஃபே காபி டே நிறுவன நிதியில் ரூ.2000 கோடி மாயம்

0 4635

கஃபே காபி டே (Cafe Coffee Day )நிறுவனர் சித்தார்த்தாவின் தற்கொலையை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த ஜூலை மாதம் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார். அதற்குப் பிறகு நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்து கஃபே காபி டே இயக்குநர் குழுமம் சுமார் ஒரு மாத கால ஆய்வை மேற்கொண்டது. இதில் கிடைத்த முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட்டாலும் சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன.

நிறுவனத்தின் பங்கு நிதியில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனிப்பட்டவர்களிடம் வாங்கிய கடனுக்காக அவர் கைமாற்றியதும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்தார்த்தாவின் தற்கொலையை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் 90 சதவிகித வீழ்ச்சியை சந்தித்த துடன், கடந்த மாதம் அதன் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments