சோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா.! பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..

0 36358

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள சோப்பை கொண்டு கைகளை சுத்தம் செய்வது சிறந்த வழியாக இருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.

கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் கடும் போராட்டத்திற்கு பிறகு உயிர்கொல்லி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், இந்தியா உட்பட பல உலக நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் கொட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் செய்வதறியாமல் பலநாடுகளும் விக்கித்து நிற்கின்றன. பல நாடுகள் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.

கொரோனாவிலிருந்து தப்பிக்க கைகளை சுத்தமாக கழுவி வைத்து கொள்வதே முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், உலகம் முழுவதும் ஹேண்ட் சானிட்டைஸர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளிலும் Hand Sanitizerகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸைக் கொல்ல சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

image

கொரோனா தாக்காமல் தற்காத்து கொள்ள Hand Sanitizer-களை விட, சாதாரண சோப்புகளே நல்ல பலன்களை தரும் என கூறப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான கரேன் ஃப்ளெமிங் கூறுகையில் கொரோனாவிற்கு எதிரான ஒரு அற்புதமான ஆயுதத்தை நாம் அனைவரும் நம் வீடுகளிலேயே வைத்திருக்கிறோம். அந்த அற்புத ஆயுதம் சோப்புகள் தான் என கூறியுள்ளார். 

ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்கள் பயனுள்ளவை தான். ஆனால் சோப்பு போட்டு கைகளை கழுவுவது வைரஸைக் கொல்ல மிகவும் சிறந்த வழி என கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அதற்கான அறிவியல் காரணத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அறிவியல் காரணம்:

கொரோனா வைரஸ் ஒரு உறையால் மூடப்பட்டுள்ளது. அதாவது oily lipid membrane எனப்படும் எண்ணெய் கொழுப்புகள் நிறைந்த வெளிப்புற ஜவ்வால் கொரோனா வைரஸ் சூழப்பட்டுள்ளது. இந்த ஜவ்வில் புரோட்டனிஸ் எனப்படும் பெரிய உயிர் அணுக்கள் அல்லது மேக்ரோ மூலக்கூறுகள் உள்ளன. இவை வைரஸ் செல்களுக்குள் நுழைய உதவுகிறது.

எனினும் இந்த கொடிய கொரோனா பலவீனமான இணைப்பைக் கொண்ட self assembled நானோ துகள் என்று கூறி உள்ளனர் மருத்துவர்கள். எனவே சாதாரண சோப்புகளை கொண்டு தண்ணீரை வேகமாக திறந்து விட்டு இரு கைகளையும் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழுவினாலே,உயிர்கொல்லியான கொரோனா வைரசின் மேற்புறம் உள்ள கொழுப்பு அடுக்கும், வைரஸும் சேர்ந்தே அழிக்கப்பட்டு விடும்.

image

சோப்பு மூலக்கூறுகள் ஒரு கலப்பின அமைப்பைக் கொண்டுள்ளன. சோப்புகளில் உள்ள ஹைட்ரோஃபிலிக் (hydrophilic) தண்ணீருடன் பிணைத்து கொள்கிறது. ஹைட்ரோபோபிக் (hydrophobic) எனப்படும் வால் பகுதி நீர், எண்ணெய் மற்றும் கொழுப்புடன் பிணைப்புகளைத் தவிர்க்கிறது.

நாம் பயன்படுத்தும் சோப்புகளில் உள்ள ஹைட்ரோபோபிக் தங்களை லிப்பிட் மென்படலத்திற்குள் (lipid membrane) இணைத்து கொண்டு அதை துடைக்கும்போது வைரஸானது அழிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட வைரஸ்கள் நாம் தண்ணீரில் கைகளை நன்றாக தேய்த்து கழுவும்போது வெளியேறிவிடுகிறது.

இதன் காரணமாகவே அனைத்து மருத்துவர்களும் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள கைகளை சோப்புகளை கொண்டு சுத்தமாக தேய்த்து கழுவுவது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments