பயணிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசுக் கப்பல்கள்

0 2067

கடல் வழி பயணிகளாலும் கொரானா பரவுவதால், பல்வேறு சொகுசுக் கப்பல்கள், துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டு செல்ல வழியில்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகளுடன் கடலோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 

எம்எஸ் பிரேமர் (MS Braemar) என்ற சொகுசுக் கப்பல் பஹாமாஸ் நாட்டின் கடலோரத்தில் இருந்து 25 மைல் தொலைவில் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 5 பேருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரீபியன் துறைமுகங்கள் இந்த கப்பலை அனுமதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த கப்பலை இயக்கி வரும் பிரிட்டிஷ் நிறுவனம் (British company Fred Olsen Cruise Lines) கியூபா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி வருகிறது.

சில்வர் ஷேடோ என்ற கப்பலில் ஒரு கனடா நாட்டு பயணிக்கு கொரானா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, 609 பயணிகள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 பயணிகள் மட்டும், தரையிறங்க அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானது. இந்த கப்பல் தற்போது பிரேசில் நாட்டின் Recife துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

சில்வர் எக்ஸ்புளோரர் என்ற சொகுசுக் கப்பல், சிலி நாட்டில் கேஸ்ட்ரோ என்ற தீவு நகர் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஒரு பயணிக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10ஆம் தேதி, 13 நாள் கடற்பயணமாக மெல்போர்னில் இருந்து புறப்பட்ட தி கோல்டன் பிரின்சஸ் சொகுசுக் கப்பல், நியூசிலாந்து கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 பேருக்கு கொரானா சந்தேகம் இருந்த நிலையில், யாரும் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பல் ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டது.

நார்வீஜியன் ஜுவல் என்ற சொகுசுக் கப்பல், இரு துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் தெற்கு பசிபிக் பெருங்கடலில், ஃபிஜி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் யாருக்கும் கொரானா பாதிப்பு அல்லது அறிகுறி உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இல்லை.

சிலி நாட்டின் சான் அன்டோனியா அருகே நிறுத்தப்பட்டுள்ள Celebrity Eclipse என்ற சொகுசுக் கப்பலில் உள்ளவர்கள் தரையிறங்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் இருந்து மார்ச் 8ஆம் தேதி 675 பயணிகளுடன் புறப்பட்ட The Azamara Pursuit சொகுசுக் கப்பல், சிலி கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments