ம.பி. சட்டப்பேரவை ஒத்திவைப்பு.. நீடிக்கும் ஆயுள்..!
இன்று கூடிய மத்திய பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் நடத்திய அமளியால், அவை வரும் 26 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கமல் நாத் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதும் தள்ளிப் போய் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிமானா கடிதங்களை கொடுத்ததை அடுத்து, கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் லால்ஜி தாண்டன், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் கமல் நாத்துக்கு உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளியால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு ஆளுநர் தமது உரையை தொடர முடியாமல் திரும்பிச் சென்றார். இதை அடுத்து அவையை வரும் 26 ஆம் தேதி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் பிரஜாபதி உத்தரவிட்டார்.
22 எம்.எல்.ஏ.க்களில், அமைச்சர்களாக இருக்கும் 6 பேரின் ராஜினாமாவை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ள சபாநாயகர் பிரஜாபதி, இதர எம்.எல் ஏ.க்களின் விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்தும் அவர் மவுனமாக இருப்பதால் மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
230 உறுப்பினர் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளதால் பலம் 228 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேரின் ராஜினாமாவால் அது 206 ஆக மேலும் குறைகிறது.
இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு அதிகம் என்பதால், 107 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக, ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் முதலமைச்சர் கமல் நாத் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போபாலில், ஆளுநர் லால்ஜி தாண்டனை சந்தித்து முறையிட்டனர்.
விரைவில் அவையை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாத த்திற்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், பெரும்பான்மையை இழந்து விட்ட கமல் நாத் அரசுக்கு தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என தெரிவித்தார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் முதலமைச்சர் கமல் நாத் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போபாலில், ஆளுநர் லால்ஜி தாண்டனை சந்தித்து முறையிட்டனர்.
விரைவில் அவையை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாத த்திற்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், பெரும்பான்மையை இழந்து விட்ட கமல் நாத் அரசுக்கு தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என தெரிவித்தார்.
சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தம்மை பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்ததை தொடர்ந்து நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத்துக்கு மாநில ஆளுநர் லால்ஜி தாண்டன் கடிதம் அனுப்பி உள்ளார்.
நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கா விட்டால், கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக கருதப்படும் என தமது கடிதத்தில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் கடிதத்தை அடுத்து மத்திய பிரதேச அரசியல் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.
Comments