அயோத்தியை வந்தடைந்த புல்லட் ப்ரூப் வசதி கொண்ட தற்காலிக கோவில்
தற்காலிகமாக ராமர் சிலையை வைப்பதற்கான புல்லட் ப்ரூப் வசதி கொண்ட மாதிரி கோவில் அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதற்கு முன்னதாக அங்குள்ள ராமர் சிலையை தற்காலிகமாக மாற்றுவதற்காக, 21 அடி உயரத்தில் 15 அடி அகலத்தில் மாதிரி கோவில் அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி அன்று ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்பட்டு, புதிய கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அங்கேயே அதற்கான அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments