நிர்பயா வழக்கு- 20ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடு தீவிரம்

0 1222

நிர்பயா கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 4 குற்றவாளிகளை வரும் 20ம் தேதி தூக்கில் இடுவதற்கு டெல்லி திகார் சிறைச்சாலையில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 

23 வயது மாணவியை ஓடும் பேருந்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 

வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு முகேஷ், பவன்குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் ஆகியோரைத் தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தூக்கில் போடும் நபருக்கு திகார் சிறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். டம்மி பொம்மைகளை வைத்து தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடத்தவும் சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனிடையே முகேஷ் என்ற குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments