இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110 ஆக உயர்வு

0 5558

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று நள்ளிரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இதில் 17 பேர் வெளிநாட்டவர்கள்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புனே நகரில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று குணமாகி வீடு திரும்ப உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இது வரை 12 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments