முதலமைச்சர் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கட்கிழமை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளும், மக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Comments