வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
தமிழக கடலோர பகுதிகளில் வானம் மேகம் மூட்டமாக காணப்பட்டாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை முழுதும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மேக மூட்டம் இருந்தாலும், காற்றில் ஈரப்பதக் குறைவு மற்றும் வானிலை மாற்றம் காரணமாக மழைப் பொழிவுக்கான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பகுதி மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments