ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்திலும் காங்கிரஸ் MLA-க்கள் விலகல்

0 8825

குஜராத்தில் விரைவில் மாநிலங்களவை  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 73 எம்எல்ஏக்கள் இருந்தனர்.  இந்த 73 எம்எல்ஏக்கள் மற்றும் மேலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் மாநிலங்களவைக்கு 2 எம்பிக்களை தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்ட நிலையில் 4 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம்  ராஜிநாமா கடிதங்களை அளித்துள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. நாளை அவர்களது பெயர்களை வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சித் தாவலில் ஈடுபடுவதை தடுக்க 14 பேர் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments