ஜோதிராதித்ய சிந்தியாதான் பாஜகவை அணுகினார் : ராஜ்நாத் சிங் விளக்கம்

0 2634

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியா சேர்ந்துள்ள நிலையில், பாஜக அவரை அணுகவில்லை, அவர்தான் பாஜகவை அணுகினார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்திருப்பதால், மத்திய பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கமல்நாத் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராஜஸ்தானின் பெயரை குறிப்பிடாமல், வேறு மாநிலம் எதிலும் ரகசியமாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இல்லை என்று ராஜ்நாத் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments