முட்டை விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி
கொரானா வைரஸ் பீதி, பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக முட்டை விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் நாளொன்றுக்கு சுமார் 3.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை தமிழகம், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதோடு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் மற்றும் கொரானா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, சுமார் 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு, முட்டை விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 ரூபாய் 23 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை, இரண்டே நாட்களில் 58 காசுகள் குறைந்து 2 ரூபாய் 65 காசுகளாக சரிவடைந்துள்ளது.
Comments