கொரானா அச்சம் : பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறிய ராணி

0 2607

இங்கிலாந்தில் கொரானா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ள நிலையில், ராணி எலிசபெத் பாதுகாப்பு காரணமாக பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்திறுத்தி வரும் கொரானா வைரசால் குழந்தைகள் மற்றும் வயது முதிந்தவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 93 வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத், அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்ட்சர் கோட்டைக்கு மாறியுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செஷயர் மற்றும் கேம்டனுக்கான இங்கிலாந்து ராணியின் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments