ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 2322

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக் மாவட்டம், தியால்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இன்று அதிகாலை  வீடு-வீடாக  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களில்  ஒருவன், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் தாரிக் அகமது என்றும், எஞ்சிய 3 பேரும் லஷ்கர்- இ- தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments