எஸ் வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்க முடியாத நிலை எனத் தகவல்

0 2270

எஸ் வங்கியில் 100-க்கும் மேற்பட்ட பங்குகளை கொண்டிருப்பவர்கள், அடுத்த 3 ஆண்டிற்கு தங்களது பங்குகளை விற்க முடியாது என எஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ள எஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுசீரமைப்பு திட்டத்தின் படி வங்கியின் பங்குகளில் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட பங்குகளை முதலீட்டாளர் ஒருவர் வாங்கியிருக்கும் பட்சத்தில், அதில் 75 சதவீத பங்குகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தானாகவே முடக்கப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், முதலீட்டாளர்கள் வங்கியின் திட்ட நெறிமுறைகளை புரிந்து கொண்டு, முடக்கப்பட்ட பங்குகளை விற்க முயற்சிக்க வேண்டாம் எனவும் வங்கி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments