சிரியா உள்நாட்டுப்போரில் 3.84 லட்சம் பேர் உயிரிழந்ததாக தகவல்
சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரியாவிலும் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அமைதியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டங்கள் அல்-அஸாத் அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்டன.இதையடுத்து, அந்தப் போராட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தன.
அதில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக சில நாடுகளும், போராளிகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் களத்தில் இறங்கியதால் இடைநிற்றலின்றி போர் தொடர்ந்தது.
இதற்கு நடுவே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தன் பங்கிற்கு போர் தொடுக்க நாசமாகிப் போனது அந்த நாகரிகத் தொட்டில். இந்நிலையில்தான் சிரியாவில் நடந்து வரும் போரினால் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் பொதுமக்கள் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Comments