ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி வைக்கும் எண்ணமில்லை - ஜப்பான் பிரதமர்
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், எதற்காகவும் தள்ளி வைக்கப்படாது என்றும் அந்நாட்டு பிரதமர் ஷின்ஷே அபே தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜப்பானிலும் கொரோனா தாக்கம் உள்ளதால், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஒராண்டுக்கு போட்டியை ஒத்தி வைக்கலாம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக ஜப்பான் பிரதமர் அபே செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை மாதம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் கொரோனா தொடர்பாக உடனே அவசர நிலை பிறப்பிக்கும் எண்ணமில்லை என்று கூறியுள்ள அவர், போட்டிகளை நடத்த ஜப்பான் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments