ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரானா
ஸ்பெயின் பிரதமரின் மனைவி பெகோனா கோமஸ் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சசின் மனைவி பெகோனா கோமசுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஸ்பெயினில் ஆறாயிரத்து 391 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதில் 196 பேர் உயிரிழந்தனர். 517 பேர் குணமடைந்துள்ளனர். ஐயாயிரத்து 678 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஸ்பெயினில் 15 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்து வாங்கவும், மருத்துவமனைக்குச் செல்லவும் ஆகிய இன்றியமையாச் சூழலைத் தவிரப் பொதுமக்கள் அனைவரும் வெளியே நடமாடாமல் வீட்டுக்குள்ளே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments