அமெரிக்காவில் 60 நாட்களுக்கு இலவச வைஃபை வசதி
அமெரிக்காவில் வைஃபை சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள், அடுத்த 60 நாட்களுக்கு கட்டணமின்றி சேவையளிக்க முடிவெடுத்துள்ளன.
கொரானாவால் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில், தனிமையை தவிர்க்கும் வகையிலும், பரஸ்பர கலந்துரையாடலை தொடரும் வகையிலும், இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, இணையத்தை அதிகமானோர் பயன்படுத்தும்போது, ஆன்லைனில் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் வழிவகை ஏற்படும் என நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வீடுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும், பொது இடங்கள் மற்றும் சிறு வணிக இடங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments