ஊழியருக்கு கொரானா அறிகுறி : கட்டிடத்தை காலி செய்த இன்போசிஸ்

0 13748

இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால், பெங்களூரில் உள்ள அலுவலகத்தை இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் பெங்களூரு மேம்பாட்டு மையத்தின் தலைவர், இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால், ஐஐபிஎம் கட்டிடத்தை காலி செய்துள்ளதாகக் கூறினார்.

மேலும், அலுவலகத்தை சுத்தம் செய்து அனைத்து  ஊழியர்களையும் பாதுக்காக்கும் நோக்கில், அவர்களை வீட்டிலிருந்து பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். எனவே, இதற்காக ஊழியர்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும், இதுதொடர்பாக வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments