5 ஆண்டுகளில் ஓட்டையான பாலம்..! கமிஷன் சோதனைகள்

0 9081

தாமிரபரணி குறுக்கே வல்லநாட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தில் 3ஆவது முறையாக ஓட்டை விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கமிஷன் ஒப்பந்ததாரர்களால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனை குறித்து விவரிக்கின்றது...

தூத்துகுடி மாவட்டம் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பலகோடி ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது.
இந்த பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் முறையாக பணி மேற்கொள்ளாமல் கொடுத்த கமிஷனுக்கு தகுந்தபடி பாலத்தை கட்டியதால் தரமின்றி அமைக்கப்பெற்ற ஓட்டை பாலம் என்ற சிறப்பு பெயரை பெற்றிருக்கின்றது இந்த ஆற்றுபாலம்..!

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். இப்படிபட்ட முக்கியமான பாலமானது சனிக்கிழமை 3ஆவது முறையாக ஓட்டை விழுந்தது.

பாலத்தின் நடு பகுதியில் கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவுக்கு சாலை பெயர்ந்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாலத்தில் திருப்பிவிடப்பட்டது

பாலம்

பொதுவாக கான்கிரீட் பாலங்கள் அமைக்கும் போது நல்ல தரமான சிமெண்ட் சல்லி மணல் கொண்டு கலவை போடவேண்டும். எப்போது தான் பாலம் நீண்ட காலம் நிலைத்து நிற்கும், மணல் மிகுதியாகவும் சிமெண்ட் குறைவாகவும் கொண்டு கலவை போட்டதால் இந்த பாலம் ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டை விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வெள்ளையர்கள் ஆட்சியில் கட்டிய பாலங்களும், காமராசர் ஆட்சியில் அமைக்கப்பட்ட பாலங்களும் நீடித்து நிலைத்து நிற்க, 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் பொத்தல் பாலமாக மாறி இருப்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரரை பிடித்து அவரது செலவில் மீண்டும் பாலத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments