முதியோர், பெண்கள் , குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் - பிரதமர் மோடி !
கொரானா வைரஸ் குறித்து, மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரானா வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளையும், வழிகாட்டும் நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு, நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை டுவிட்டர் மூலம் அளித்திருந்த விளக்கத்தை, ரீ - டுவிட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொரானா அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு காற்றோட்டமான அறை தேவை என்றும், தனி கழிவறை வசதி இருப்பது நல்லது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு வேளை, வேறு யாராவது உடன் தங்க நேர்ந்தால், 2 மீட்டர் தூரம் வரை தள்ளி இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால், தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ இல்லங்களுக்கு அருகே இல்லாமல், தள்ளி இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Some important information here.
Do read??. https:/t.co/sZrLgHFTH8
— Narendra Modi (@narendramodi) March 14, 2020 ">
Some important information here.
— Narendra Modi (@narendramodi) March 14, 2020
Do read??. https://t.co/sZrLgHFTH8
Comments