கொரானா எதிரொலியாக அங்காடிகளுக்கு மக்கள் வருகை குறைந்தது

0 1545

ஆஸ்திரேலியாவில் உள்ள சிறப்பங்காடிகளில் காட்சிப் பெட்டகங்களில் பொருட்கள் அடுக்கி வைக்கப்படாமல் வெறுமனே காட்சியளிக்கின்றன.

கொரானா வைரஸ் பரவல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பொது இடங்களுக்கும் கடைகளுக்கும் வருவது குறைந்துவிட்டது. இதன் காரணமாக சிட்னியில் உள்ள சிறப்பங்காடிகளில் பொருட்களின் விற்பனை பெருமளவில் குறைந்துவிட்டது.

இதையடுத்து மளிகைப் பொருள் விற்பனைச் சிறப்பங்காடிகளான ஊல்ஒர்த்ஸ், கோல்ஸ் ஆகியவை தங்கள் கொள்முதல் அளவைப் பெரிதும் குறைத்துவிட்டன. கடைகளில் உள்ள காட்சிப் பெட்டகங்கள் பொருட்களின்றி வெறுமனே காட்சியளிக்கின்றன. ஏற்கெனவே வாங்கியவற்றில் விற்காத பொருட்கள் மட்டும் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments