விரைவில் உயரும் செல்போன் விலை..?
செல்போன்களுக்கான ஜி. எஸ்.டி வரி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் விலை உயரும் என எதிபார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற ஜி. எஸ். டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,செல்போன்களுக்கும், செல்போன் உதிரி பாகங்களுக்கும் ஜி எஸ் டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கான ஜி எஸ் டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எந்திரங்கள் மூலம் தயார் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், 2017-2018ம் ஆண்டிற்கு வரப்பெற வேண்டிய ஐ-ஜிஎஸ்டி தொகை மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையினை மத்திய அரசு விரைந்து தமிழக அரசுக்கு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினார்.
ஏற்கனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையினை ஐந்தாண்டுகளுக்கு வழங்கிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments