பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு.
இந்த கலால் வரி உயர்வு மூலம், மத்திய அரசிற்கு சுமார் 39,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய நிலையில், சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியால் எழும் லாபங்கள் 2014-15ம் ஆண்டு சுமார் 39,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயைப் அரசுக்கு பெற்றுதந்தது.
அதனை அடிப்படையாக கொண்டு,மத்திய அரசு மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ .2 முதல் ரூ .8 ஆகவும், டீசல் விலை ரூ .2 ல் இருந்து ரூ .4 ஆகவும் உயர்த்தப்பட்டது.கூடுதலாக, சாலை வரிகள் மீதான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் லிட்டருக்கு தலா 1 ரூபாய் உயர்த்தப்பட்டு 10 ரூபாய் ஆனது. இதன் மூலம், பெட்ரோல் மீதான கலால் வரி மொத்த லிட்டருக்கு ரூ .22,98 ஆகவும், டீசல் ரூ .18.83ஆகவும் உயர்ந்துள்ளது.
Comments