கொரானா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவர்..!

0 16207

கொரானா பாதிப்பு அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தனியார் கல்லூரி மாணவருக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த அந்த மாணவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனை கொரானா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவரது எச்சில் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மாதிரிகள் குறித்தான அறிக்கை வந்தபின்னரே அவருக்கு வந்துள்ள காய்ச்சல் குறித்து கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments