இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

0 2703

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெரியசோமூரை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் முத்துசாமி தனது உறவினர் பழனிச்சாமியுடன் காஞ்சிகோயில் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி ஒருவழி பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

வலதுபுறமாக மோட்டார் சைக்கிளை அவர் திரும்பியபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்து தீப்பிடித்தது.

இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். விதியை மீறி ஒருவழிப்பாதையில் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments