தொரப்பள்ளி - தருமபுரி இடையே புதிய நால்வழிச்சாலை அமைக்கத் திட்டம்

0 1922

ஓசூர் அருகே தொரப்பள்ளி - தருமபுரி இடையே இரண்டாயிரத்து 61 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நால்வழிச்சாலை அமைக்கத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தொரப்பள்ளி முதல் சித்தண்டஅள்ளி வரை 37 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறும். சித்தண்டஅள்ளியில் இருந்து தருமபுரி வரை 34 கிலோமீட்டர் தொலைவுக்கு 980 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்படும்.

இதற்குத் தேவையானதில் 80 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரியுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால் சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் தொலைவில் 25 கிலோமீட்டர் குறையும். இந்தத் தடத்தில் உள்ள பாலக்கோடு, ராயக்கோட்டை பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments