ஐஐடி மாணவியின் விளையாட்டு -பீதியில் உறைந்த பேருந்து பயணிகள்

0 8061

சென்னை அருகே தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த ஐஐடி மாணவி ஒருவர், தோழிகளுடன் காரில் செலவதற்காக பேருந்தை நிறுத்த வேண்டி தனக்கு கொரானா பாதிப்பு உள்ளதாகக் கூறி சக பயணிகளை பீதிக்குள்ளாக்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற கேபிஎன் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில் இளம் பெண் ஒருவர், ஏறியிருக்கிறார். மேல் மருவத்தூர் அருகே வரும்போது தனக்கு கொரானா பாதிப்பு இருப்பதாககவும் பேருந்தை நிறுத்துமாறும் கூறி இருமல் வந்தவர் போல் அந்த பெண் பாவனை செய்யவே, அனைவரும் அரண்டுபோயுள்ளனர்.

பேருந்து உடனடியாக நிறுத்தப்படவே, கீழே இறங்கிய அந்தப் பெண், பின்னால் வந்த காரில் ஏறிச் சென்றுள்ளார். இதுகுறித்து பயணிகளில் சிலர் போலீசுக்கும் சுகாதாரத்துறைக்கும் போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு கிருமிநாசினி மருந்துகளைக் கொடுத்து சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து ஆம்னி பேருந்து நிறுவனத்திடம் அந்த இளம் பெண்ணின் தொடர்பு எண்ணைப் பெற்று விசாரித்ததில் அவர் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி சுஜிதா என்பது தெரியவந்தது.

சுஜிதா கோவைக்கு அந்த பேருந்தில் டிக்கெட் புக் செய்த நிலையில், சக தோழிகள் பின்னால் காரில் வந்துள்ளனர். சுஜிதாவை அவர்கள் போனில் அழைக்கவே, காரில் செல்வதற்காக அவர் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஓட்டுநர் நிறுத்தாதால் தனக்கு கொரானா என்று கூறி விபரீத விளையாட்டை அவர் அரங்கேற்றியது தெரியவந்தது. அந்த மாணவி மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில், அவரை சுகாதாரத்துறை அதிகாரிகளும் போலீசாரும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments