மருந்து மூலப்பொருட்கள், முககவசங்களை இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுகோள்

0 18605

மருந்து மூலப்பொருட்கள் மற்றும் முககவசங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு, பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரானா நிலவரம் தொடர்பாக, பிரதமர் மோடியை கடந்த புதன்கிழமை பெஞ்சமின் நேதன்யாகூ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதை பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய நேதன்யாகூ, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான பொருட்களுக்கு பல்வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மருந்து மூலப்பொருட்கள் மற்றும் முக கவசங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அவர் கேட்டுக்கொண்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments