திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

0 12187

திருப்பதிக்கு இணையாக பழனி கோயிலில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

திண்டுக்கல் அடுத்துள்ள ஒடுக்கம் பகுதியில் 327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து அடிக்கல் நாட்டினர். 

நிகழ்ச்சியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 63 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்டுள்ள சுகாதார நலத்திட்டங்களை பட்டியலிட்டார். கொரானா வைரஸ் தொடர்பான அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ள பழனி கோயிலில், திருப்பதிக்கு இணையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்றுவதற்கு, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும், அதிமுக அரசு மீது குறைகளை கண்டுபிடிக்க முடியாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

 புதிதாக தொடங்கவுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், வரும் கல்வியாண்டில் 150 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முன்னதாக, கொரானா அச்சுறுத்தல் காரணமாக அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments