காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு
தமிழகத்தில் மழலையர் வகுப்புகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரைக்கும் வரும் 31ம் தேதி வரை அளிக்கப்பட்ட விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக மழலையார் வகுப்புகளான ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்திருந்தது.
கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Comments