2023-க்குள் அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயமாக்க ரயில்வே திட்டம்
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் 67 ஆயிரத்து 368 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை உள்ளது. இவற்றில் 38 ஆயிரத்து 558 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 28 ஆயிரத்து 810 கிலோமீட்டர் தொலைவையும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்மயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி 2019 - 2020 ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டர் மின்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2020-2021 ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டரும், 2021 - 2022 ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டரும் ரயில்பாதைகள் மின்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2022 - 2023 ஆண்டில் ஆறாயிரத்து 500 கிலோமீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய நாலாயிரத்து 310 கிலோமீட்டர் தொலைவை 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் மின்மயமாக்க இலக்கு குறிக்கப்பட்டுள்ளது.
Comments