ரூ.307 கோடி லஞ்சம் வாங்கியதாக எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு
அவந்தா குழுமத்துக்குக் கடன் வழங்க விதிகளைத் தளர்த்தியதற்காக 307 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாக எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவர் மனைவி பிந்து ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவந்தா குழுமத்தின் நிறுவனர் கவுதம் தாப்பருக்குச் சொந்தமாக டெல்லியில் இருந்த பங்களாவை ராணா கபூரின் மனைவி பிந்துக்குச் சொந்தமான பிளிஸ் அபோட் நிறுவனம் 375 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.
இந்த பங்களாவை இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் 685 கோடி ரூபாய்க்கு பிளிஸ் அபோட் நிறுவனம் அடமானம் வைத்துள்ளது. இந்த பங்களாவை வாங்கி அடமானம் வைத்ததில் ராணா கபூர், பிந்து ஆகியோருக்குக் கிடைத்த 307 கோடி ரூபாய் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதில் அவந்தா குழுமத்துக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு 307 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
Comments