செல்போனில் குழந்தைகள் ஆபாசப் படம் வைத்திருந்தாலே நடவடிக்கை - ஏ.டி.ஜி.பி. ரவி
செல்போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் வைத்திருந்தாலே கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சிறார் ஆபாசப் பட விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2000 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments