நெஞ்சில் பாலை வார்க்கும்.. ஹேப்பி மம்....
ஹேப்பி மம் என்ற வாட்ஸ் அப் குரூப் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு காணப்படுகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கான உணவில் மிகவும் இன்றிமையாதது தாய்ப்பால். தாய்ப்பால் பற்றாக்குறையினால் பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு கடந்த 2014 ம் ஆண்டில் முதல்முறையாக தாய்ப்பால் வங்கியை தொடங்கியது.
மூன்று குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தொடங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி 23 ஆக உயர்த்தப்பட்டதால், ஆண்டுக்கு 35 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
தாய்ப்பால் வங்கிக்கான புதிய வகை உபகரணங்கள், அதனை இயக்கும் முறை தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்களுக்கான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை செவிலியர்களின் முயற்சியினால் ஹேப்பி மம் என்ற வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டு அதில் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
Comments