எவரெஸ்ட் சிகரத்தில் ஏற, மலை ஏற்ற வீரர்களுக்கு அனுமதி மறுப்பு
கொரானா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மலை ஏற்ற வீரர்கள், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதியை, நேபாள அரசு தற்காலிகமாக
நிறுத்தி வைத்துள்ளது.
தலைநகர் காட்மாண்டுவில், செய்தியாளர்களிடம் பேசிய, அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் Yogesh Bhattarai , இந்த உத்தரவு, வருகிற மே மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் நேபாளத்தின் அனைத்து மலைச்சிகரங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவித்தார்.
2015 - ல் பூகம்பம் நிகழ்ந்த போது, எவரெஸ்ட் சிகரத்தில் மலை ஏற்ற வீரர்கள் ஏறுவதற்கான அனுமதியை நேபாள அரசு, அப்போது நிறுத்தி வைத்திருந்தது. இதனிடையே, வருகிற ஏப்ரல் 30 ம் தேதி வரை, விசா வழங்குவதையும் நேபாள அரசு நிறுத்தி வைத்துள்ளது.
Comments