பாகிஸ்தானில் 8 ராணுவ அதிகாரிகளுக்கு கொரானா பாதிப்பு

0 5578

பாகிஸ்தானில் 8 ராணுவ அதிகாரிகள் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்கனவே சிந்து மாகாணத்தில் 14 பேர், கில்கிட் - பல்டிஸ்தான் பகுதியில் 5 பேர் பலுசிஸ்தானில் ஒருவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் கொரானா வைரஸ் சிறப்பு மருத்துவர் குழு பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் 3 லெஃப்டினன்ட் கர்னல்கள், 2 கர்னல்கள் 2 பிரிகேடியர்கள் 1 மேஜர் ஜெனரல் மட்டத்திலான அதிகாரிகளுக்கு கொரான பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சக டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments