NZ vs AUS - ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

0 1979

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இந்த போட்டி துவங்கியது. கொரானா பீதி காரணமாக, வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.  போட்டியை காணவும், மைதானத்திற்குள் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்க நியூசிலாந்து அணி, 41 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 187 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில், 1 க்கு பூஜ்யம் என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments