6 அமைச்சர்கள் விலகல் - ஆளுநர் ஒப்புதல்..!
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்திருந்த அமைச்சர்கள் 6 பேரின் பதவி விலகலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களைச் சட்டப்பேரவைத் தலைவர் பிரஜாபதியிடம் அளித்துள்ளனர்.
அமைச்சர்களாக இருந்த இமார்த்தி தேவி உள்ளிட்ட 6 பேரும் பதவி விலகல் கடிதங்களை ஆளுநர் லால்ஜி தாண்டனிடம் வழங்கினர். இந்நிலையில் முதலமைச்சர் கமல்நாத் ஆளுநரை சந்தித்தபோது, அமைச்சர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 6 பேரின் பதவி விலகலையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
Comments